அறிமுகம்
டி. தருமராஜ், தமிழில் எழுதும் சமகாலச் சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். நாட்டுப்புறவியல், மானிடவியல், மொழியியல், குறியியல், வரலாற்றுவரைவியல், பண்பாட்டு ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர்.
1980களின் பிற்பகுதியில் புனைவெழுத்தாளராக அறிமுகமான டி. தருமராஜ், 90களுக்குப் பின்பு அபுனைவுகள் மட்டுமே எழுதி வருகிறார்.அயோத்திதாசர் ஆய்வுகளை முன்மொழிந்து வளர்தெடுத்ததில் இவரது பங்கு கணிசமானது.