top of page

முகம்மது யூசுப், ஜல்லிக்கட்டு நூல் பற்றி...

  • Jan 31
  • 3 min read

நானூற்றி சொச்ச பக்கங்கள். பாதி தாண்டிட்டேன்.

இந்த புத்தகம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அதற்கு முன்னால் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் சொல்ல வேண்டும்

ஒரு நாள் மதியம் சாப்பிட அமர்ந்திருந்தோம். நான் மனைவி மற்றும் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் எனது மகன்.

சாதாரண பேச்சிற்கு இடையே அண்ணமலை அவர்கள் பற்றிய பேச்சு வந்தது.

"யாரு அண்ணாமலை" அப்படின்னு கேட்டுட்டான்.

கொதிச்சிட்டேன் நான். ஏன்னா அவன் படிக்கும் அதே வ உ சி கல்லூரியில் மாணவர்கள் இடையே ஒரு நிகழ்விற்காக பேசியுள்ளேன். பண்பாடு என்ற தலைப்பில். அங்கு பேசிய மாணவர்கள் தொ.பரமசிவம் பற்றி தொடர்ந்து பேசியது மகிழ்வை தந்தது.

இவன் என்னடான்னா யாரு அண்ணாமலைன்னு கேக்குறான் என்ற கோபம்

இடையில் நுழைந்த என் மனைவி "பொறு சாமி, கோவப்படாதீங்க பொறும பொறும " என்றாள்.

சாப்பிடும் நேரத்தில் சண்டை கூடாது என வெள்ளை கொடி காட்ட கலவரம் நிலவரம் ஆனது.

ஒரு மணி நேரம் கழித்து நாங்கள் இருவரும் தனியாக இருக்கும் போது

அண்ணாமலை தெரியாதுன்னு சொன்னது தப்பா என்றாள்

நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு, இவனுக்கு பேரு கூட தெரியல என்றேன்.

அவன் காலேஜ் பிரன்ட்ஸ் எல்லாருமே இந்துகள். யாருமே அப்படி பழகலை பாருங்க. அவுங்களுக்கு அண்ணாமலை அவசியப்படலை. நீங்க நிறைய வாசிக்கிறீங்க உங்களுக்கு அதெல்லாம் தேவப்படுது. அவுங்க உலகத்துல அது இல்ல. சந்தோசப்படுங்க என்று அறிவுரை வழங்கினாள் மனைவி

பொதுவா நான் பெண்கள் பேச்சை மதிப்பவன் (ஆஹா எவ்வளவு நல்லவனா இருக்கேன்)

ஆனா இதெல்லாம் தெரிஞ்சிக்கிடுறது அவசியம் என்றேன்.

தெரியலைன்னா

யானைய சிங்கத்த பத்த தெரியலைன்னா அணில் குஞ்சை காட்டின் ராஜான்னு நெனச்சிக்குவாங்க இந்த இளைய தலைமுறை அரசியல் தெரிவது அவசியம்ன்னு சொன்னேன்

ஜல்லிகட்டு என்ற நிகழ்வை பல கோணங்களில் அலசுகிறது இந்த புத்தகம்

எல்லாவற்றையும் விட நிறைய கற்றுத் தருகிறது

அரசியல் உட்பட

முழுதாக வாசித்துவிட்டு கட்டுரை ஒன்றை எழுதுவேன்

ஜல்லிகட்டு போராட்டம் வழியக இளைய தலைமுறையின் அரசியல் தேவையை மட்டுமல்ல பல புரிதல் தரும் புத்தகம்


*

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் போது ஷாஐகான் அண்ணன் எனது பதிவில் ஒரு கமென்ட் போட்டார். அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் கட்சிகளை ஏன் ஒதுக்குகிறீர்கள். கட்சிகள் இன்றி நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்கள் என்று.

அன்று அவர் கேட்டபோது கட்சி உள்ளே வந்தால் அந்த கட்சிக்கானதாக மாறிவிடும் பிறரின் ஒத்துழைப்பு கிடைக்காது. கட்சிகள் இல்லாத போராடம் தான் சரி. என்றெல்லாம் பதில் கூறினேன்

அது எவ்வளவு அபத்தம் என்று இந்த நூலை வாசிக்க வாசிக்க புலப்படுகிறது.

நிறைய கட்டமைப்புகள் உடைகிறது. ஒரு நூலில் எத்தனை குறிப்புகளும் கோடுகளும் போடுவது.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறுகிறது. அதில் என் போன்றோரும் சேர்ந்து பேசியது ." அரசியல் (போராட்டம்) வேண்டும் ஆனால் அரசியல் அடையாளங்கள் (கட்சிகள்) வேண்டாம்

மாணவர் நடத்திய போராட்டம் அதனால் கட்சிகளை தவிர்த்தார்கள். சரி, எந்தவித அசம்பாவிதமும் இன்றி அநியாய ஒழுங்குணர்வு எப்படி எல்லா இடங்களிலும் எல்லா நாட்களிலும் பேணப்பட்டது.

வேலை முடிந்த பின் சாமன்யன் இரவில் குடும்பங்கள் கலந்து கொள்கிறான். பண்பாட்டின் மீது அவ்வளவு பிடிப்புள்ள சமுகமா இது

கிராமத்திற்கான விளையாட்டிற்காக பெரும் நகரங்கள் போட்டி போட்டு களத்தில் இறங்குமா.

பொறுப்பற்ற இளைய தலைமுறை என அதற்கு முன் வரை திட்டு வாங்கிய இளைஞர்கள் கூட்டம் திடிரென ஜல்லிக்கட்டு கிளர்ச்சி, மாநில உரிமை, தமிழ் தேசிய அரசியல், சுதேசி அரசியல், பசுமை அரசியல் எல்லாம் பேசுவதும் போராடுவதும் எப்படி. திடிர் அரசியல் புரிந்துணர்வு வந்தது எப்படி

சாப்பாடு தண்ணீர் இரவு பெண்களின் பாதுகாப்பு தடையின்றி நிகழ்வது எப்படி

இதை நடத்துவது யார்

இப்படி தன்னுள் தோன்றிய பல கேள்விகள் தான் இந்த புத்தகத்தை எழுதக்காரணம் என்கிறார் ஆசிரியர்.

இனி புத்தகத்தில் இருந்து சில வரிகள்.

சாதிய அமைப்பை பேணியபடியே பெரியாரிய மார்க்சிய தலித்தியம் பேசுவது

ஜனநாயக விழுமியங்களை பேச்சாகவும் பாரம்பரிய சாதிய நடைமுறைகளை செயலாகவும் கொள்ளும் வெற்றிகரமான மாதிரி

எதிரி எப்போதும் தமிழ்நாட்டிற்கு வெளியே இருப்பதாக பாவனை செய்வது

எதிரி என்று தனியாக யாருமில்லை நாம் தான் ஒருவருக்கு ஒருவர் முரண்களோடு நிற்கிறோம். சொந்த அக முரண்களை சுட்டிக்காட்டி அதை களைய முயற்சி எடுக்காத நிலை

இப்படி பிடித்த வரிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பொதுவாக நான் நண்பர்களிடம் சொல்வது உண்டு. Ideology politician வேற community politician வேற.

Community politician ரொம்ப டேஞ்சர். அவனோட மாஸ் தான் அந்த கம்யூனிடியை பெரும் திரளாக திரட்டுது, அவனிடம் எந்த ஐடியாலஜியும் இல்லை. அம்மஞ்சல்லி பிரயோஜனம் கிடையாது அந்த கூட்டத்தால். அந்த அபாயத்தை இந்த நூல் புரிய வைக்கிறது.

ஆனா இங்க ஒரு பிரச்சனை இருக்கு.

நம்மாளுக்கு கதையாடல் தான் பிடிக்கும். அதை ரொம்ப திட்டமிட்டு ஒரு கும்பல் கூட்டம் நடத்தி பரப்பிக்கிட்டு இருக்காங்க.

அறிவு சார் எழுத்து பரப்பில் தனி மனித வாழ்வியல் கதையாடல் தான் கடைசி படி.

அறிவது இலக்கியம் ஆகாது என்று கற்றுக்கொடுக்கும் முட்டாள்களின் கூட்டம் இங்க இருக்கு.

உண்மையை அறிஞ்சிட்டா சுதாரிச்சிருவான் என்று கதை என்பார்கள் அதன் பின் சமய இலக்கியம் என்பார்கள் அதன் வழியே இந்து ஞான மரபு என்பார்கள் அதன் ஊடாக சாதிப்பற்றை வளர்ப்பார்கள். இது தான் திட்டம்.

அதனால் தான் கட்டுரை தொகுப்புகளுக்கு இங்கு பெரிய வரவேற்பு கிடையாது. இது திட்டமிட்டு நடக்கும் சதி.

மொழி, பண்பாடு, அரசியல், கலாச்சாரம் எல்லாவற்றையும் கலந்தடித்து புதிய திறப்புகளை கொடுக்கிறது இந்த புத்தகம்

காலையில் புத்தக கண்காட்சி பரிந்துரை என்று சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் புத்தகம் கூற வரும் கருத்தியல் என்ன என்று எழுதவில்லை. அதனால் இந்த பதிவு.

இன்னமும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை. ஆனாலும் பக்கத்திற்கு பக்கம் முகத்தில் அறைவது போல உண்மை வெளிவருவதால் உண்டான ஊந்துதல் இதை எழுத வைத்தது.

வாசித்துப்பாருங்கள்.

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
1ADAC9F0-E9E2-4CB2-8C07-EA1B8B3B4C47.png
bottom of page