top of page

ஜல்லிக்கட்டு... லஷ்மணசாமி ஒடியன்

  • Jan 31
  • 1 min read

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.டி தருமராஜ், மானுடவியல், பண்பாடு மற்றும் வரலாறு உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர்


2017-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை , அதன் அரசியல் மற்றும் பண்பாட்டுப் பரிமாணங்களை ஒரு ஆய்வாளர் கண்ணோட்டத்தில் விவாதிக்கும் அவரது ஜல்லிக்கட்டு: கிளர்ச்சி எனும் சூழ்ச்சி" என்னும் நூலை இந்த கண்காட்சியையொட்டி சால்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


ஒரு 'வெகுமக்கள் கிளர்ச்சி' எவ்வாறு ஒரு திருவிழாவைப் போல நிகழ்ந்தது என்பதையும், அதற்குப் பின்னால் உள்ள போக்குகளையும் நாட்டுப்புறவியல் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்நூலில் ஆராய்ந்திருக்கிறார்


பார்ப்பதற்குத் திருவிழாவைப் போல இருந்ததால் எல்லோரையும் இது கவர்ந்தது. அரசுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஒரு திருவிழாவைப் போல நிகழ முடியுமா என்ற சந்தேகம் ஆய்வாளர்களிடம் இருந்தது.

​DT இந்தப் போராட்டத்தை வான் ஜென்னப்பின் Rites of Passage என்ற கோட்பாட்டின் மூலம் விளக்குகிறார்.


இப் போராட்டத்தின்போது நிலவிய ஒரு சடங்கு சார்ந்த ஒழுங்கை கேள்விக்குட்படுத்துகிறார்.

​ஜல்லிக்கட்டு காளையின் வரலாற்றை சிந்துவெளி முத்திரைகள், நடுகற்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் வழியாகத் தேடும் DT, வெகுஜன அரசியல் மற்றும் ஊடகத் தாக்கங்களையும் இதனுடன் இணைத்துப் பேசுகிறார்.


ஆடிப்பெருக்கு, காளை அரசியல், பண்பாட்டுப் பதட்டம், முதலீட்டியமும் நாட்டுப்புறவியலும் உள்ளிட்ட ஆறு முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் ,30 பக்கங்களை வாசித்திருக்கிறேன் தொடர்ந்து


வாசிக்கவும் விவாதிக்கவும் ஒரு பன்முக வெளியை இந்நூல் அளிக்கிறது.

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
1ADAC9F0-E9E2-4CB2-8C07-EA1B8B3B4C47.png
bottom of page