top of page

ஜல்லிக்கட்டு - வாசக அனுபவம்.

  • Jan 30
  • 2 min read

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி சாதாரண நபராக பார்க்கும் விஷயத்தை ஒரு ஆய்வாளர் பார்வையில் புத்தகம் மொத்தமாக விவரிக்கிறது.

இதிலுள்ள கருத்துக்களில் உள்ள ஆய்வுகள் மானுடவியல் மற்றும் உளவியல் பகுதிகளை பிரித்து காண்பிக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டமாக இருக்கட்டும் அல்லது மாடுகளின் பண்பாடாக இருக்கட்டும் அனைத்திலும் தீவிர ஒழுங்கு தான் நம்மை ஈர்த்தது. இந்த ஒழுங்கின் மீது இரு‌க்கு‌ம் குற்ற உணர்வும், பயமும் தான் அதிகாரத்தில் ஒரு வெறுமையை உருவாக்கியது.

அரசியல் இல்லாமல், ஒரு பண்பாட்டு போராட்டம். இதில் கிராமத்தை காப்பாற்ற, நகரம் தன்னை முன் நிறுத்தியது.

அரசியலில் கிராமம் தான் மிகப்பெரிய தூண். இந்த வெறுமை தான் அதிகாரத்தில் வஞ்சகமாக மாறுகிறது.

இந்த இரண்டு உணர்வுகள் மூலம் தான் மாடுகளை பண்பாட்டு ரீதியாக எப்படி கையாளப் பழகி வைத்திருகிறார்கள் என்பது புரிகிறது.

மாடும், மனிதனும் ஒன்று தான் என்கிற ரீதியில் பண்பாட்டை சமூக மக்கள் வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். அதனால் தான் கோபத்தில் மாடு மாதிரி உழைக்கிறேன் என்கிறார்கள்.

அதீத ஒழுங்கு, அதீத உழைப்பு இவை இரண்டும் மாட்டின் பாலியல் உணர்வை குறைக்கிறது. மனிதனும் அதே போல் தான் இருக்கிறான்.

குறிப்பிட்ட பசு மாடுகளுக்கு இனப்பெருக்கம் செய்ய காளை ஒன்று தான். மற்ற காளைகள் முழுவதும் உழைப்பதற்கு மட்டுமே.

இந்த ஒழுங்கு தான், மனிதனுக்கும் இருக்கிறது. அதனை வைத்து ஒவ்வொரு திணை சார்ந்த நிலப்பெண்களும் தங்களைப் பிரித்து பார்க்கிறார்கள்.

குறிஞ்சி நிலப்பெண்கள் ஆண்களின் காதலிலும், முல்லை நிலப்பெண்கள் காதலிக்காமல் வாடிய முகத்துடனும், மருதநிலப் பெண்கள் குடும்பம் என்று கூட்டம் பற்றி யோசிக்கும் நபர்களாக இருக்கிறார்கள்.

இவை அனைத்தும், லக்கான் பார்வையில் விவரிக்கிறது.

பாலியல் தேவையில் அல்லது தனது வளமை பற்றிய சிந்தனையில் சந்தேகம் வரும் போது எல்லாம், மனிதர்கள் சடங்குகளைச் செய்கிறார்கள்.

ஆணைக் காளையாக வைத்தும், பெண்ணைப் பயிராக வைத்தும் சடங்குகள் நடைபெறும்.

முளைப்பாரி எடுப்பது எல்லாம், இனப்பெருக்க உணர்வை கலை வடிவமாக மாற்றும் முறையாகும்.

மொத்தத்தில் பிம்பத்திற்கும், நான் என்கிற குறியீட்டு நிலைக்கும் இடையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்த ஒழுங்கை மீறும் போது, நமக்கு குற்ற உணர்வு ஏற்படும். ஆனால், மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் மூலம், அவனுக்குத் தேவைப்படுகிற வரையில் குற்றங்களை செய்ய பழகி விட்டார்கள்.

வாடிவாசல் அமைப்பு கூட, யோனி வடிவில் செய்திருக்கிறார்கள்.

மனிதன் மாட்டிற்கு காட்டை நினைவு படுத்த முயற்சி செய்கிறான்.

உண்மையில், ஆதிகால ம‌னித‌ன் என்கிற காட்டின் நினைவு மனிதனுக்கு தான் அதிகம் தேவைப்படுகிறது. அதனை தக்க வைக்க மாட்டின் மூலம் தன்னைப் பரிசோதி‌த்துக் கொள்கிறான்.

அதற்கான சடங்காக, காளையை வைத்து மனிதர்கள் செய்யும் சமய, பண்பாடு, சமூகப் பார்வையை நமக்கு தெளிவாக இந்த புத்தகம் புரிய வைக்கிறது.

பின்குறிப்பு : புத்தகத்தை இரண்டாக பிரித்து படித்தேன். மேலே எழுதிய பக்கங்கள் முடித்த பின், கீழே கொடுத்திருக்கும் குறிப்புகள் நிறைய தகவல்களை சேகரிக்க உதவியாக இருக்கும்.


காயத்ரி மஹதி.

 
 
 

Recent Posts

See All
முகம்மது யூசுப், ஜல்லிக்கட்டு நூல் பற்றி...

நானூற்றி சொச்ச பக்கங்கள். பாதி தாண்டிட்டேன். இந்த புத்தகம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அதற்கு முன்னால் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் சொல்ல வேண்டும் ஒரு நாள் மதியம் சாப்பிட அமர்ந்திருந்தோம். நான் மனைவி ம

 
 
 
ஜல்லிக்கட்டு... லஷ்மணசாமி ஒடியன்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.டி தருமராஜ், மானுடவியல், பண்பாடு மற்றும் வரலாறு உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளுக்கும்

 
 
 
ஜல்லிக்கட்டு நூல் பற்றி...

தமிழ் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு பெரிய போராட்டம். தமிழகமெங்கும் மக்கள் ஒரு சேர கலந்து கொண்ட ஒரு போராட்டம். தமிழர்களின் வீர விளையாட்டைக் காக்க, தமிழர்களின் அடையாளத்தைக் காக்க என்ற உணர்வோடு அனைவரும் க

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
1ADAC9F0-E9E2-4CB2-8C07-EA1B8B3B4C47.png
bottom of page