top of page

ஜல்லிக்கட்டு ... தொடர்கிறது.

இரத்தம் கொதிக்கிறது!


டி. தருமராஜின் "ஜல்லிக்கட்டு " புத்தகத்தில் முதலாவது கட்டுரையை நான்கு நாட்களாக வாசித்து முடித்தேன்.!

இரத்தம் கொதித்தது!

ஏன்?

வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் பரம்பரை ஊப்பி.!

எலக்சன்ல எங்கய்யா பூத் ஆபிசரா ஒரு ஆரேழு ஓட்டு கலைஞர்க்கு போட்டாத்தான், அந்த வருசம் தெய்வ நிவர்த்தி ஆகும்.எட்டு மணிக்கு மேல வீட்ல வந்து (சரக்குலதான்) கலைஞர் புகழ் பாடீட்டு இருக்கும்போதுதான் அம்மா அம்மாவிற்கு ஓட்டுப் போட்டேங்கும்.அப்புறம் என்ன? அதேதான்.

ஊர்ல நான்,சின்னவன்,அம்னி பேர கேட்கும்போது குணசேகர், ஞானசேகர், ஜெயலட்சுமின்னு சொல்றப்ப கொஞ்சம் படிச்சவங்க அடுத்து சந்திரசேகரான்னு கேட்டப்ப, அப்ப புரீல,இப்ப புரீது.

எங்கெளுங்கே தெரியாம எங்க ஒடம்புல டீயெம்கே ரத்தம் ஓடீட்டு இருக்கு.

இப்படியாப்பட்ட நானு அந்த மேற்கண்ட புத்தகத்த படிக்கறப்ப, என் இரத்தம் எப்படி தளபுளன்னு கொதிச்சிருக்கும்,நீங்களே யோசீங்க.

இரத்த கொதிப்பு கொஞ்சம் அடங்குன பின்னாடி,அசை போட்டு பாத்தா,

திராவிட கட்சிகள வாரவும் செய்யாறாரு,வாழ்த்தவுஞ் செய்யறாரு.

சரிதான்,இது ஏதோ வெளாட்டுதான்.என்னன்னவெல்லாம் முன்னால எழுதிருக்காருன்னு திலுப்பிப் பாத்தா,

பெரியார பாராட்டுராரு,ஆனா அயோத்திதாசர் அளவுக்கு சீன் இல்லைங்கறாரு.

தீமுகாவுக்கு சமூக கூர்ம இல்லைங்கறாரு,கலைஞருக்கு பேனா வைக்கனுங்கறாரு.இளயராஜாவுக்கு அங்கீகாரம் குடுன்னு இவங்ககிட்டயே கேக்கவுஞ் செய்யறாரு.

இது என்னமாரியான இதுன்னு புரியல.

தருமராஜ், நீங்களே சொல்லுங்க,நாட்டுப்புறவியல்ல ஏதாவது இந்தமாரி எதிரிணைகள (love-hate)வெச்சு எழுதறமாரி ஏதாவது கான்செப்ட் இருக்கா?

இல்ல,நீங்களே என்னமாரி முன்னாள் அல்லது இன்னாள் அவைத் தலைவரா?


மருத்துவர் குணசேகரன்.

 
 
 

Recent Posts

See All
முகம்மது யூசுப், ஜல்லிக்கட்டு நூல் பற்றி...

நானூற்றி சொச்ச பக்கங்கள். பாதி தாண்டிட்டேன். இந்த புத்தகம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அதற்கு முன்னால் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் சொல்ல வேண்டும் ஒரு நாள் மதியம் சாப்பிட அமர்ந்திருந்தோம். நான் மனைவி ம

 
 
 
ஜல்லிக்கட்டு... லஷ்மணசாமி ஒடியன்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.டி தருமராஜ், மானுடவியல், பண்பாடு மற்றும் வரலாறு உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளுக்கும்

 
 
 
ஜல்லிக்கட்டு நூல் பற்றி...

தமிழ் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு பெரிய போராட்டம். தமிழகமெங்கும் மக்கள் ஒரு சேர கலந்து கொண்ட ஒரு போராட்டம். தமிழர்களின் வீர விளையாட்டைக் காக்க, தமிழர்களின் அடையாளத்தைக் காக்க என்ற உணர்வோடு அனைவரும் க

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
1ADAC9F0-E9E2-4CB2-8C07-EA1B8B3B4C47.png
bottom of page