காலக்கிரமம்
-
1990ல் நாட்டார் வழக்காற்றியல் முதுகலைப் பட்டம் (தூய சவேரியார் கல்லூரி)
-
1992ல் ஆய்வாளர் (நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்)
-
1998ல் முனைவர் பட்டம் (ஜவஹர்லால் நேரு பல்கலை)
-
1998ல் உதவிப்பேராசிரியர் (தூய சவேரியார் கல்லூரி)
-
1999ல் Folklore Fellows Summer School (Finland)
-
2005ல் அம்பேத்கர் ஆய்வு மைய உருவாக்கம் (தூய சவேரியார் கல்லூரி)
-
2007ல் UGC, CIIL ஆய்வுத் திட்டங்கள்
-
2011ல் இணைப்பேராசிரியர் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
-
2012ல் துறைத்தலைவர், நாட்டுப்புறவியல் துறை (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
-
2012 - 2015 UGC, ICSSR & IGNCA ஆய்வுத் திட்டங்கள்
-
2014ல் பேராசிரியர் மற்றும் தலைவர், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
-
2016ல் வருகைதரு ஆராய்சியாளர் (University of Tubingen, Germany)
-
2017ல் வருகைதரு பேராசிரியர் (George August University, Gottingen, Germany)
-
2018ல் CBCS Coordinator (Madurai Kamaraj University)
-
2020ல் Controller of Examinations (Madurai Kamaraj University)
ஆசிரியர் குறிப்பு
டி. தருமராஜ், தமிழில் எழுதும் சமகாலச் சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். நாட்டுப்புறவியல், மானிடவியல், மொழியியல், குறியியல், வரலாற்றுவரைவியல், பண்பாட்டு ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர்.
1980களின் பிற்பகுதியில் புனைவெழுத்தாளராக அறிமுகமான டி. தருமராஜ், 90களுக்குப் பின்பு அபுனைவுகள் மட்டுமே எழுதி வருகிறார்.
அயோத்திதாசர் ஆய்வுகளை முன்மொழிந்து வளர்தெடுத்ததில் இவரது பங்கு கணிசமானது. ‘அயோத்திதாசர் சிந்தனைகள் - தொகுதி 1,2,3’ வெளியிடப்பட்டது முதல் அவரது எழுத்து குறித்த ஆய்வுச் சட்டகத்தை முன்மொழிந்தது வரை அயோத்திதாசரை மீட்டெடுத்ததில் முன்வரிசை ஆய்வாளர்.
’வேற்றுமைகளை அழித்தல்’ இவரது சிந்தனையின் அடிநாதம் என்று சொன்னால் சரியாக இருக்கும். அறிவியலுக்கும் புனைவிற்குமான வேற்றுமைகளைத் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி வருகிறவர்.
அந்த வகையில், இவரது ஆய்வுக் கட்டுரைகள் புனைவெழுத்தின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திக் கொள்பவை. ஒரு கட்டத்தில் இது சிறுகதையா கட்டுரையா என்ற மயக்கத்தை தோற்றுவிக்கும் வகையில் எழுதக்கூடியவர்.
இவரது எழுத்து நடையால் உந்தப்பட்டு ஏராளமான இளம் ஆய்வாளர்கள் அபுனைவு எழுத ஆரம்பித்தனர்.
இவரது முக்கியமானப் புத்தகங்கள் சில … ‘கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும்’, ‘சனங்களின் சாமிகள்’, ‘தமிழ் நாட்டுப்புறவியல்’, ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’, ‘அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை’, ‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?’
ஆசிரியரின் முழு விவரம் :